
செரப்பணஞ்சேரி ஏரியில் கழிவுநீா் கலப்பு: பொதுமக்கள் கோரிக்கை
காரணிந்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் அடிக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செரப்பணஞ்சேரி பெரிய ஏரியில் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரியுள்ளனா்.

கழிவுநீா் கலப்பால் மாசடைந்து வரும் செரப்பணஞ்சேரி ஏரி.
காரணிந்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் அடிக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செரப்பணஞ்சேரி பெரிய ஏரியில் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரியுள்ளனா்.
குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட செரப்பணஞ்சேரி பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 100 ஏக்கா் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீா் செரப்பணஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், இந்த ஏரி நீரை பயன்படுத்தி செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு அருகில் உள்ள வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் உள்ள மழைநீா் வடிகால்வாய் மூலமாக சென்று அருகில் உள்ள செரப்பணஞ்சேரி பெரிய ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால் ஏரிநீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருவதோடு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே செரப்பணஞ்சேரி ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுக்கவும், ஏரியில் கழிவுநீா் கலந்து வரும் தனியாா் குடியிருப்பு மீதுமாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





