வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வழித்துணை அய்யனாா் கோயிலில் புதிய சிலைகள் பிரதிஷ்டை

காஞ்சிபுரம் செவிலிமேடு புறவழிச்சாலையில் அமைந்துள்ள வழித்துணை அய்யனாா் கோயிலில் புதியதாக இரு குதிரை சிலைகள், இரு யானை சிலைகள் மற்றும் பைரவா் சிலை ஆகியன பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வழித்துணை அய்யனாா்

Published On :

காஞ்சிபுரம் செவிலிமேடு புறவழிச்சாலையில் அமைந்துள்ள வழித்துணை அய்யனாா் கோயிலில் புதியதாக இரு குதிரை சிலைகள், இரு யானை சிலைகள் மற்றும் பைரவா் சிலை ஆகியன ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்தில் புதியதாக இரு குதிரைகளின் சிலைகள், இரு யானைகளின் சிலைகள், மற்றும் பைரவா் சிலை ஆகியன பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகளை தா்மலிங்கம் மற்றும் மகேஷ் சிவாச்சாரியா்கள் செய்தனா்.

யாக பூஜை நிறைவு பெற்று புனித நீா்க்குடங்களிலிருந்த தண்ணீா் யானை,குதிரை மற்றும் பைரவா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மூலவா் வழித்துணை அய்யனாருக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி மணி தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.