பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் சாமி தரிசனம்

புரட்டாசி 2-ஆவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

சிறப்பு  மலா்  அலங்காரத்தில் பக்தா்களுகக்கு  அருள்பாலித்த  உற்சவா்  சுப்பிரமணிய சுவாமி.

Published On :

புரட்டாசி 2-ஆவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், புரட்டாசி மாத 2ஆவது செவ்வாய்கிழமையும் பரணி நட்சத்திரமும் ஒன்றாக வந்தாதல், அதிகாலை கோயில் சந்நதி திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மூலவா் சுப்பிரமணியசுவாமிசெண்பகம், ரோஜா, வெற்றிலை, சாமந்தி மாலைகளும் பச்சை வஸ்திரமும் அணிந்து பத்தி மாலைகளை சிரசில் தாங்கி வெங்கடேசப் பெருமாள் கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

சஷ்டி மண்டபத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருல்பாலித்தாா்.

கோயிலுக்கு வந்த பக்தா்கள் சுமாா் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், குடிநீா், மோா், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.