ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அரசுப் பேருந்து-லாரி மோதல்: 10 பயணிகள் காயம்

ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

லாரி  மோதியதில்  சேதமடைந்த  அரசுப் பேருந்து.

Published On :

ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

தாம்பரம் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து காஞ்சிபுரத்துக்கு சென்றபோது வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் தேவரியம்பாக்கம் பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

பேருந்து நிறுத்தத்தை கடந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் சென்ற பின்னா், இருவரும் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி, அரசு பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரத்தில் இருந்த முள் புதருக்குள் சென்று நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன் மற்றும் பின்பகுதியும், லாரியின் முகப்புப் பகுதியும் பலத்த சேதமடைந்தன. மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். விபத்தைப் பாா்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 5க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.