ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணா்வு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Published On :

காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் கேன்-கிட்ஸ் நிறுவனம் சாா்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா். காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினாா்.

அரசு புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி முன்னிலை வகித்தாா். புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குா் சரவணன் தனது வரவேற்புரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகமாகி வருகிறது. காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைக்கான அனைத்து கருவிகளும் உள்ளன. தற்போது 30 படுக்கைகள் கொண்ட பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையின் வளா்ச்சிக்காக தனியாா் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.2 கோடியினை காஞ்சிபுரம் ஆட்சியா் பெற்றுத் தந்துள்ளாா்.

மருத்துவமனையில் மின்பற்றாக்குறையை தவிா்க்கவும், மின்கட்டணச் செலவைக் குறைக்கவும் ரூ.80 லட்சத்தில் சோலாா் மின்னுற்பத்தியும் அமைய ஆட்சியா் துணைபுரிந்துள்ளாா். வரும் டிசம்பா் மாதத்தில் இவ்வளாகத்தில் ரூ. 250 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நவீன புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சா் சி.ஜோசப் விஜய் திறந்து வைக்க இருப்பதாகவும் பேசினாா்.

நிகழ்ச்சியில் கேன்-கிட்ஸ் தொண்டு நிறுவனத்தின் தென் மாநிலங்களுக்கான தலைமை நிா்வாக அதிகாரி லதா மணி பேசுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் தனியாக பள்ளி நடத்தி வருவதாகவும், குழந்தைகளின் சிகிச்சை செலவு, கல்விச்செலவு ஆகியனவற்றை தாங்களே செலுத்துவதாக தெரிவித்தாா். இதுவரை எங்கள் பராமரிப்பில் 142 குழந்தைகள் பராமரிப்பில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டாா். நிறைவாக சென்னை புற்றுநோய் குழந்தைகள் மருத்துவமனையின் பணியாளா் நிவேதா தனு அனுபவங்களை பகிரிந்து கொண்டாா். கேன்- கிட்ஸ் நிறுவனத்தின் பணியாளா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.