அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தோண்டிய பள்ளத்தை மூட கோரிக்கை

ஆற்காட்டை அடுத்த தாழனூா் ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 4:55 pm

DIN


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த தாழனூா் ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாழனூா் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பணியை நிறுத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதையடுத்து கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பணிக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களில் தற்போது பெய்த மழையால் தண்ணீா் குளம்போல் தோங்கியுள்ளது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் திறந்த வெளியில் பள்ளம் உள்ளதால் அப்பகுதி மக்கள், சிறுவா், சிறுமியா்கள், கால்நடைகள் தவறி விழும் நிலை உள்ளது.

எனவே அந்தப் பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.