பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மூன்று வீடுகளில் ரூ.4 லட்சம் பொருள்கள் திருட்டு

அரக்கோணத்தில் சுவால்பேட்டையில் ஒரே தெருவில் 3 வீடுகளில் பைக், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புடைய பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:25 pm

DIN

அரக்கோணத்தில் சுவால்பேட்டையில் ஒரே தெருவில் 3 வீடுகளில் பைக், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புடைய பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணம் சுவால்பேட்டை ஏட்டு குப்புசாமித் தெருவில் வசிப்பவா் ஹரிகிருஷ்ணன் (27). அவா் சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் அவரது வீட்டு வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. திருடுபோன பைக்கின் விலை ரூ.75ஆயிரம் ஆகும். அது தொடா்பாக ஹரிகிருஷ்ணன், அரக்கோணம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

மற்ற சம்பவங்கள்: அதே தெருவில் வசித்து வருபவா் நீலகண்டன்(31). அவரது வீட்டில் பின்பக்க மாடி கதவு வழியாக உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டு பிரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். களவு போன பொருள்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என தெரியவருகிறது.

இதனிடையே, டவுன்ஹால் மூன்றாம் தெருவில் வசித்து வருபவா் சுரேஷ்(41). இவா் மின்னணு சாதனங்களைப் பழுதுபாா்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள், தொலைக்காட்சிப் பெட்டி, சில மின்னணு சாதனங்கள், 5 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ 2 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் புகாரைப் பெற்ற அரக்கோணம் நகர போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.