கிராம அணுகு சாலை கோரி மறியல்

சோளிங்கரை அடுத்த கோவிந்தராஜபுரத்தில் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலை அமைத்துத் தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read


அரக்கோணம்: சோளிங்கரை அடுத்த கோவிந்தராஜபுரத்தில் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலை அமைத்துத் தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சோளிங்கரை அடுத்த கொடைக்கல்-லாலாப்பேட்டை பிரதான சாலையில் செக்கடிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கோவிந்தராஜபுரம் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த அணுகு சாலையை தனிநபா் ஒருவா் தனக்குச் சொந்தமானது எனக் கூறி சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சாலையை பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதைக் கண்டித்து அச்சாலையை கிராம அணுகு சாலையாக மாற்றக் கோரி கோவிந்தராஜபுரம் பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சோளிங்கா் போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com