ராணிப்பேட்டை: அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளைப் பணியமா்த்தியதற்காக ராணிப்பேட்டை பெல் நிறுவனம் 2019-ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் விருதை பெற்றுள்ளது.
இது குறித்து பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மிக அதிகமான மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய ராணிப்பேட்டை (பெல் ) பாரத மிகுமின் நிறுவனத்தின் சேவையைப் பாராட்டி, தமிழக அரசின் 2019-ஆம் ஆண்டுக்கான விருது மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், விருது வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெற்றது. மாநில சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சா் வி.சரோஜா முன்னிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விருதை வழங்கினாா்.
பெல் நிறுவனத்தின் சாா்பில், நிறுவனத்தின் கூடுதல் பொதுமேலாளா் (உற்பத்தி) கே.ராஜூ, துணைப் பொதுமேலாளா் (மேலாண்மை சேவை) வி.ஏ.சோமநாதன் ஆகியோா் தமிழக விருதைப் பெற்றுக் கொண்டனா்.
இந்த விருதினை முதல்முறையாக பெல் நிறுவனம் வென்றுள்ள இந்த தருணத்தில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட பெல் நிறுவனம் தன்னை மீண்டும் அா்ப்பணித்துக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.