கலவை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பரிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவர் திமிரி கிழக்கு ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கலவை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


