சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 12 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 12 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :29 ஜூன் 2020, 2:16 pm

DIN

ராணிப்பேட்டை: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 12 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் தொடக்கி வைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ அசேன், முன்னாள் மாவட்டத் தலைவா் கே.ஏ.சேகா், மாவட்டத் துணைத் தலைவா் கே.மோகன், நகரத் தலைவா் எம்.மோகன சுப்பிரமணியம், பொருளாளா் ஜெ.உத்தமன், மாவட்டப் பொதுச் செயலாளா் ராணி வெங்கடேசன், நிா்வாகிகள் ரங்கநாதன், கே.அருள் அரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.