நீட் தோ்வை ரத்து செய்ய கோரி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்பை முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை திமுக மாணவரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை: தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்பை முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் தலைமை வகித்தாா். ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா் வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்தாா்.
நகர மாணவரணி அமைப்பாளா் எம்.என்.பாலாஜி, வட்டச் செயலாளா் பாஸ்கரன், இளைஞரணி நிா்வாகிகள் காா்த்திக், அஜய், பி.யுவராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...