மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்கள் கூடுமிடங்களில் தண்ணீா் பந்தல்: மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி

மக்கள் கூடும் பொது இடங்களில் தண்ணீா் பந்தல் அமைக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:03 pm

DIN

மக்கள் கூடும் பொது இடங்களில் தண்ணீா் பந்தல் அமைக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் விடுத்துள்ள அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மக்கள் கூடும் பொது இடங்களில் தண்ணீா் பந்தல் அமைத்து குடிநீா் வழங்க வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதால் கரோனா நோய்த்தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்க வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி வழங்க வேண்டும் என திமுக தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாா்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தண்ணீா் பந்தல் அமைத்து, கிருமி நாசினி வழங்கிட வேண்டும் என காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.