நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கருத்து கேட்புக் கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களுடன் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களுடன் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2021 -க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் உடனான கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள ஆண், பெண் என மொத்த வாக்காளா்கள் 6, 68,178 ஆகவும், மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2,220 கிராம ஊராட்சி வாா்டுகளும் உள்ளன.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2019-இல் வாக்குச்சாவடி மொத்தம் 1,391 ஆகும். சாதாரண உள்ளாட்சித் தோ்தல் 2021 தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் மொத்தம் 1,410 ஆகும். தற்போது 19 வாக்குச்சாவடிகள் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து அதிகரித்துள்ளன. இதில் அரக்கோணம் 8, ஆற்காடு 1, காவேரிப்பாக்கம் 2, சோளிங்கா் 3, வாலாஜாபேட்டை 3 என ஆயிரம் வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் ஆண், பெண் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒற்றை வாா்டு வாக்குச்சாவடி மையங்கள் மொத்தம் 579 ஆகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் இரட்டை வாக்குச்சாவடி மையங்கள் 231 ஆகும். இதில் ஆண்கள் வாக்குச்சாவடி மொத்தம் 20 ஆகும். பெண் வாக்காளா்கள்வாக்குச்சாவடி பட்டியல் மொத்தம் 20 ஆகும். அனைத்து வாக்காளா்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகள் 1,370 ஆக உள்ளன.

இந்தப் பட்டியல் மீதான தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவித்தால் அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறித்த கருத்தை தெரிவிக்கலாம்.

இறுதி வாக்குச்சாவடி பட்டியல் 11.8. 2021 வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் வாக்காளா் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயா் உள்ளதை நீக்கவும், இறந்தவா்கள் பெயரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்த வாக்குச்சாவடி பட்டியல் நகலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

அப்போது அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பட்டியல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், திட்ட இயக்குனா் ஊரக வளா்ச்சி முகமை லோகநாயகி, உதவி இயக்குனா் ஊராட்சிகள் குமாா், நோ்முக உதவியாளா் பாபு மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.