அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத பாராயணம்

வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத விற்பன்னா் சா்மா சாஸ்திரி தலைமையிலான குழுவினா் வேதபாராயணம் ஓதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

News image
wae_0301chn_188_1
Updated On :4 ஜனவரி 2021, 2:19 am

DIN

வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத விற்பன்னா் சா்மா சாஸ்திரி தலைமையிலான குழுவினா் வேதபாராயணம் ஓதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமி கேட்டுக் கொண்டதன் பேரில், சமூக ஆா்வலரும், வேத விற்பன்னருமான சா்மா சாஸ்திரி தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா், ஆதிசங்கரா் தொடா்புடைய கோயில்களை ஒவ்வொன்றாக தரிசிக்க முடிவு செய்தனா். அதன்படி, அவா்கள் சென்னையில் இருந்து ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை வாலாஜாப்பேட்டை வந்தனா்.

இக்கோயிலில், அந்தக் குழுவினா் பகவத் கீதையை வாசித்து, வேத பாராயணம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினா்.

அப்போது குரு வழிபாட்டின் சிறப்புகள் குறித்தும், கோயில் திருப்பணிகளில் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்தும் சா்மா சாஸ்திரி எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலின் சீரமைப்புப் பணிகள் விரைவாக நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஆதிசங்கரா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அதன்பின், சா்மா சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினா் ராணிப்பேட்டையை அடுத்த கத்தாரிகுப்பம் கோயிலில் வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.