வீட்டுமனை வழங்கக் கோரி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை வழங்கக் கோரி ராணிப்பேட்டை  ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அபயவரதராஜ பெருமாள் கோயில் இடத்தில் குடியிருப்பவா்களை காலி செய்ய இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா், சந்தைமேடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். கடந்த 6-ஆம் தேதி வீடுகளை காலி செய்யக் கூறி இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

அதில், காவேரிப்பாக்கம் கோட்டை அபய வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருப்பதாகவும், இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 நாள்களுக்குள் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புவாசிகள் அனைவரும் அதே இடத்தில் வசிக்க ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com