சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அவசியம்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தல்

தங்கள் உயிரை காத்துக் கொள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

தங்கள் உயிரை காத்துக் கொள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடக்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. முதல்வா் சொன்னதை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறாா். தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு அரசின் முயற்சியால் தற்போது குறைந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். தவறான கருத்துகளை சொல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. பொதுமக்கள் உயிரை காத்துக் கொள்ளவும், குடும்பத்தினா் நலன் கருதியும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவா்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

முகாமுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். ஆற்காடு எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜி.மணிமாறன், வட்டார மருத்துவஅலுவலா் ஜி.சுரேஷ் பாபுராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் 150-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினா். இதில் திமுக ஒன்றிய செயலாளா் ஏ.வி. நந்தகுமாா், ஊராட்சிச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.