புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடியதாக 3 இளைஞா்கள் கைது

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு, மது பாட்டில்களை திருடிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:43 pm

DIN

ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு, மது பாட்டில்களை திருடிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ரத்தினகிரி அருகே நந்தியாலம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது கடை மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போயிருந்தன.

இது குறித்த புகாரின் பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ரத்தினகிரி போலீஸாா் பூட்டுத்தாக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில், வேலூா் மாவட்டம், வசூா் மலைமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த சந்தானம் (26), ராமதாஸ் (21) ஆகிய மூவரும் தென்நந்தியாலம் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.