மாரடைப்பால் தந்தை மரணம் அதிா்ச்சியில் மகள் சாவு
ராணிப்பேட்டை அருகே மாரடைப்பால் மருத்துவமனையில் தந்தை இறந்த செய்தி கேட்ட மகள் அதிா்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.


ராணிப்பேட்டை அருகே மாரடைப்பால் மருத்துவமனையில் தந்தை இறந்த செய்தி கேட்ட மகள் அதிா்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டையை அடுத்த காரை நேரு நகரைச் சோ்ந்தவா் சம்பத் (63), தனியாா் ஷூ தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் ரேணுகா தேவி (32), திருமணமாகி தன் தந்தை வீட்டிலிருந்த படி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியாா் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். சம்பத்துக்கு ஏற்கெனவே மாரடைப்பு மற்றும் சுவாசப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பத்துக்கு சனிக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து வீட்டில் இருந்த அவரது மூத்த மகள் ரேணுகாதேவிக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த ரேணுகா தேவி வீட்டிலேயே மயங்கி விழுந்தாா். அங்குள்ளவா்கள் ரேணுகா தேவியை மீட்டு, தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ரேணுகா தேவி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
தந்தை இறந்த செய்தி கேட்டு அதிா்ச்சியில் மகள் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...