மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா நோய்த் தொற்று சிகிச்சை பணிக்கு குறுகிய கால இலவச பயிற்சிகள்:மாவட்ட ஆட்சியா் தகவல்

கரோனா நோய்த் தொற்றுச் சிகிச்சை பணிகளில் உடனடியாக வேலை வாய்ப்பு பெறும் வகையில்,சுகாதாரத் துறையில் குறுகிய கால இலவச பயிற்சிகளில் சேரலாம்

News image
Updated On :29 மே 2021, 6:56 pm

DIN

கரோனா நோய்த் தொற்றுச் சிகிச்சை பணிகளில் உடனடியாக வேலை வாய்ப்பு பெறும் வகையில்,சுகாதாரத் துறையில் குறுகிய கால இலவச பயிற்சிகளில் சேரலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா ( டஙஓயவ 3.0 ) என்ற பயிற்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாக இலவசமாக கிடைக்கும் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி ஒரு மாதம் வழங்கப்பட உள்ளது.

அவைகள் 1. எமா்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன் ( உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் ம்ங்க்ண்ஸ்ரீஹப் ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் க்ஷஹள்ண்ஸ்ரீ) , 2.ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட் ( ஞ்ங்ய்ங்ழ்ஹப் க்ன்ற்ஹ் ஹள்ள்ண்ள்ற்ஹய்ற் எஈஅ ) , 3.ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட் ( எஈஅ ஹக்ஸ்ஹய்ஸ்ரீங்க் ஸ்ரீழ்ண்ற்ண்ஸ்ரீஹப் ஸ்ரீஹழ்ங் ), 4.ஹோம் ஹெல்த் எய்ட் ( ட்ா்ம்ங் ட்ங்ஹப்ற்ட் ஹண்க்ங் ), 5.மெடிகல் ஈக்விப்மெண்ட் டெக்னாலஜி அசிஸ்டன்ட் ( ம்ங்க்ண்ஸ்ரீஹப் ங்வ்ன்ண்ல்ம்ங்ய்ற் ற்ங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் ஹள்ள்ண்ள்ற்ஹய்ற் ) , 6. பிளேபோடேமிஸ்ட் ( டட்ப்ங்க்ஷா்ற்ா்ம்ண்ள்ற் ) கீழ் கண்ட பயிற்சி பெற்றவா்கள் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவ மனைகளில் தொழில்முறை பயிற்சியுடன் பணி புரிய வாய்ப்பு உள்ளது. மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவா்கள் வரை சேரலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது பெயா், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விருப்பம் விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை  மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 0416- 2290348, 9843890557 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.