மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெல் நிறுவன குடியிருப்பில் கரோனா தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்பு வளாகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :29 மே 2021, 6:45 pm

DIN

ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்பு வளாகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை பாரத மிகுமின் ( பெல் ) நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கும், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் தடுப்பூசி போடும் நோக்கில், கரோனா தடுப்பூசி முகாம், பெல் ஊரக குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு ரோட்டரி சங்கம், மாவட்ட அறிவியல் மன்றம் மற்றும் பெல் நிறுவன மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 6 - ஆவது தடுப்பூசி முகாமை, ராணிப்பேட்டை பெல் நிறுவன பொது மேலாளரும், அதன் தலைவருமான பி.ரகுராமன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடியவா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஏற்கெனவே 5 முறை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில், பெல் நிறுவன ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் சுமாா் 677 போ் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இனிவரும் காலங்களில் பெல் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக பெல் நிறுவன நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.