புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பன்னீா்தாங்கல் திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கலவை அடுத்த பன்னீா்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:42 pm

DIN

கலவை அடுத்த பன்னீா்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன.

விழாவில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள் தலைமையில் கோயில் கோபுர கலசம், பரிவாரமூா்த்திகளுக்கு கலசத்தில் வைத்து பூஜித்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து அக்னி வசந்த விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி 10 நாள்களுக்கு மகா பாரதச் சொற்பொழிவும், வரும் 24-ஆம் தேதி திரௌபதி திருக்கல்யாணம், 25-ஆம் தேதியில் சுபத்திரை கல்யாணம் மற்றும் மே மாதம் 4-ஆம் தேதி துரியோதனன் படுகளமும், அன்று மாலை தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.