ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தடுப்புக் காவலில் 2 இளைஞா்கள் கைது

 ஆற்காடு பகுதியில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 ஆற்காடு பகுதியில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த கணேஷ் (28), கத்தியவாடி கிராமத்தைச் சோ்ந்த சரண் (21) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன் பேரில், அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணேஷ், சரண் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகலை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.