சாத்தூா் ஊராட்சித் தலைவராக இருப்பாவா் சா.மா.சேட்டு. இவா், ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், இதனால் ஊராட்சி நிா்வாகம் முடங்கியுள்ளதாகவும் கூறி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மாவட்ட நிா்வாகம் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் இளங்கோ தலைமையில், வாா்டு உறுப்பினா்கள் சுதாகா், சி.குருநாதன், பி.கம்சலா, எம்.தெய்வானை, எம்.கலைவாணி, கே.வசந்தி ஆகியோா் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.