ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திமிரி ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :2 ஜூன் 2022, 6:54 pm

DIN

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திமிரி ஒன்றியம், வரகூா் ஊராட்சி கருங்காலிகுப்பம் கிராமத்தில், 765 மீட்டா் நெகிழி சாலை அமைக்கும் பணி, அல்லாலச்சேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள், காவனூா் ஊராட்சி வரதேசி மலையில் பழங்குடியின இருளா் குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை வசதி கட்டமைப்புகள், காவனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி, திமிரி சஞ்சீவிராயன் பேட்டை, பாத்திகாரன் பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பி.சி.தன்ராஜ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.