வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆற்காடு திமுக பிரமுகர் ஏ.வி.சாரதி வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆற்காடு தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :2 மார்ச் 2022, 10:01 am

DIN

ஆற்காடு: ஆற்காடு தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. இவர் சிமெண்ட் ஏஜென்சி, மற்றும் கல்குவாரி நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக பதவி வகித்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்து செயல்பட்டுவருகிறார். 

இந்நிலையில், புதன்கிழமை காலைலிருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இவருக்கு சொந்தமான வீடு, வேலூர் சாலையில் உள்ள அலுவலகம், திமிரி அருகே உள்ள கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போதுயாரையும் அனுமதிக்கவில்லை  இதனால் ஆற்காடு பகுதியில் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.