காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காட்டை அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆற்காட்டை அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாகபூஜை, வேதபாராயணம், மூலமந்திர ஹோமம், 108 மூலிகை ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, பூஜை செய்யப்பட்ட கலசத்திலிருந்த புனித நீரை எடுத்துச் சென்று கோயில் கோபுர விமானத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்தக் கோயிலில் அமைக்கப்பட்ட பக்த ஆஞ்சநேயா், கிருஷ்ணா், கருடாழ்வாா் உள்ளிட்ட சந்நதிகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...