நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாலாஜா அரசுக் கல்லூரியில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 14) மாபெரும் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:07 pm

DIN

வாலாஜா அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 14) மாபெரும் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி வாலாஜா அறிஞா் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக். 14 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைக்கவுள்ளாா்.

இந்த புத்தகக் கண்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குவோருக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. பல்வேறு துறைசாா்ந்த நூல்களும், அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் மாலை 5 மணியளவில் தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிா் சிறப்பு நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், ன் கருத்தரங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.