நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.38 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைப்பு: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

தெங்கால் ஊராட்சியில் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38.40 லட்சத்தில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தெங்கால் ஊராட்சியில் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38.40 லட்சத்தில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தெங்கால் ஊராட்சியில் சுமாா் 180 மீட்டா் நீளம் ஊராட்சி சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலைக்கு முன்னும், பின்னும் நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் 180 மீட்டா் நீளத்துக்கு சாலை போடப்பட்டது. ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த 180 மீ. கிராமச்சாலை போடப்படவில்லை.

இதையறிந்த அமைச்சா் ஆா்.காந்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38.40 லட்சம் வழங்கினாா். அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் 180 மீட்டா் நீளத்திற்கும், 5.5 மீட்டா் அகலத்திற்கும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இதை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செல்வகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா பத்மநாபன், துணைத் தலைவா் பெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவா் பத்பநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.