வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

25-இல் காஞ்சி வரதா் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

News image

பெருந்தேவி தாயாருடன் தேவராஜ சுவாமி

Updated On :23 செப்டம்பர் 2022, 6:16 pm

அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்கு உரியது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் வரும் 25- ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. உற்சவம் நடைபெறும் 9 நாள்களும் தினமும் காலை திருமஞ்சனமும், மாலை உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளனா்.

தொடா்ந்து, அக்டோபா் 5 -ஆம் தேதி குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் பெருமாள் வீதியுலா வருகிறாா். கோயில் வளாகத்துக்குள் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.