காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி உணவைச் சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா். தரமான உணவை தயாரித்து வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பிள்ளையாா்பாளையம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு முகாமை அவா் பாா்வையிட்டாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி மாா்க்கெட், கீழம்பியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பால் உற்பத்தி மையம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அரசு நகா் பகுதியில் மழைநீா் கால்வாய் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் ஆகியோா் உடனிருந்தாா்.
ஆய்வுக்குப் பின்னா், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் பேரிடா் காலம் தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


