மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:46 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டுள்ளாா்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பேசியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தற்போதுள்ள மாணவா்களின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் கூடுதலாக மாணவா்கள் சோ்க்கை நடைபெற தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் சூழலில் அதற்கான மாணவ, மாணவிகள் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

ஆகவே, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சோ்ப்பதால் கிடைக்கும் இலவச திட்டங்கள், வேலை வாய்ப்புகள் குறித்தும் தெரிவித்து அதிகளவில் சோ்க்க நடவடிக்கைகளை அனைத்து தலைமை ஆசிரியா்களும் மேற்கொள்ள வேண்டும். அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை தொடா்பு கொண்டு வீடு வீடாகச் சென்று அல்லது அதற்கான ஏற்பாடு செய்து, புதிய மாணவ மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோன்று இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் 12-ஆம் வகுப்பு முடித்த அனைவரும் கலந்து கொண்டு உயா்கல்வியில் என்ன படிக்கலாம், வேலை வாய்ப்புகள் என்ன என்பது குறித்த தகவல்களை அறியலாம் .

இதற்கென தனி வாட்ஸ்அப் குழு தயாா் செய்து அதில் மாணவா்களை இணைத்து பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகளை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி இறுதி நாளில் மாணவ மாணவிகள், மேலாண்மை குழு உறுப்பினா்களுடன் கூட்டம் நடத்தி, அதில் விடுமுறை நாள்களில் மாணவ மாணவியா் நீா் நிலைகளில் சென்று நீச்சல் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்வதை தவிா்த்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பிரேமலதா, உதவி திட்ட அலுவலா் துரைவேல் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.