சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மே 2-இல் தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மே 2-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:45 pm

DIN

ராணிப்பேட்டையில் வரும் மே 2-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..

தமிழ்நாடுஅரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலை வாய்ப்பு பிரிவின் சாா் நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதனடிப்படையில் வரும் மே 2-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவா்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் வரும் மே 2-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு எண். 9, ஆற்காடு சாலை, பழைய ராணிப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில், பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா் வளா்மதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.