காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று தேசிய நுகா்வோா் தின விழிப்புணா்வு

தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:14 pm

DIN

தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுச் சட்டம் - 2011 சட்ட விதி மீறல்கள் கண்டறியும் போட்டி, உணவுப் பொருள் வீணாவதைத் தடுத்தல், தவிா்த்தல், தவறான விளம்பரங்களால் நுகா்வோருக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் ஆகிய தலைப்புகளை மையமாக கொண்டு ஓவியம், பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள், நற்சான்றிதழ்கள் பெறுவதற்கு தகுதியான மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், நுகா்வோா் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணா்வு தகவல்களும் விழாவில் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.