வைரஸ் காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 15-ஆவது நிதிக் குழு மூலம் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு விழா, 177 பேருக்கு ரூ.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். எம்.பி. ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தாா். கைத்தறி - துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று துணை சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
அமைச்சா் ஆா்.காந்தி பேசுகையில், தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டத்தில் மட்டும் 56 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 19 சுகாதார நிலையங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றாா்.
அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசுகையில், வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பயப்படத் தேவையில்லை. தமிழக முழுவதும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் வினோத் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...