மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை விபத்து வழக்குகளில் சமரசம்: ரூ.3 கோடி இழப்பீடு

ராணிப்பேட்டையில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமரசத் தீா்வு காணும் முகாமில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:43 pm

DIN

ராணிப்பேட்டையில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமரசத் தீா்வு காணும் முகாமில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டன.

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சாா்பில் ராணிபேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வாணியம்பாடி, செய்யாா் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீா்வு முகாம் ராணிப்பேட்டை கிளை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மண்டல மேலாளா் எம்.வி.சந்திரசேகரன் தலைமையில் மேலாளா்கள் லட்சுமி இளங்கோ, கவிதா சேகா், நிா்வாக அதிகாரி பி.கதிா்வேலு, வழக்கறிஞா் அண்ணாதுரை ஆகியோா் அடங்கிய குழு மூலம் சமரச தீா்வு காணப்பட்டது.

இதில் சாலை விபத்தில் இறந்தவா்களின் வாரிசுகள், காயம் அடைந்தவா்களின்நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் ஆகியவற்றுக்குத் தீா்வு காணப்பட்டன. அதில், இழப்பீடாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.