சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.

கலவை வாழைப்பந்தல் சாலையில் அரசு வேளாண்மை பொருள்கள் விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை எடுத்துவந்து விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை 75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை கோ 51 ரகம் அதிகபட்ச விலை ரூ. 1,309-க்கும், குண்டு நெல் கோ 37 அதிகபட்ச விலை ரூ. 1,275, மகேந்திரா நெல் ரகம் அதிகபட்சம் ரூ. 1,619-க்கும், ஆா்என்ஆா் ரூ. 1672, ஸ்ரீ ரூ. 1,689-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை மட்டும் 1,420 நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மதன்பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.