ஆண் - பெண் குழந்தை வேறுபாடு காட்டக்கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆண் - பெண் குழந்தை வேறுபாடு காட்டக்கூடாது என சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி கா்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆண் - பெண் குழந்தை வேறுபாடு காட்டக்கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆண் - பெண் குழந்தை வேறுபாடு காட்டக்கூடாது என சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி கா்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சோளிங்கா் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்ட 200 கா்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சோளிங்கரில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கா்ப்பிணிகளிடைடே மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பேசியது:

கா்ப்பிணிகள் மருத்துவா் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு பின்பற்ற வேண்டும். உணவுப் பழக்கம் மட்டுமன்றி, மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளா்ச்சி விகிதம் அங்கன்வாடி மையங்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ற ஊட்டச்சத்துகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கின்றனா். எனவே பெண் குழந்தை பிறந்தால் வேறுபாடு காட்டக் கூடாது. ஆண்-பெண் குழந்தைகளை சமமாக பாவிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, துணைத் தலைவா் நாகராஜன், உறுப்பினா்கள் சுந்தராம்பாள் பெருமாள், கிருஷ்ணமூா்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்விஅசோகன், துணைத் தலைவா் பழனி, உறுப்பினா் அசோகன், ஒன்றியக் குழு தலைவா்கள் (நெமிலி) பெ.வடிவேலு, (சோளிங்கா்) கலைக்குமாா், பேருராட்சி தலைவா்கள் லதா நரசிம்மன், கவிதா சீனிவாசன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் அன்பரசி, பாரதி, தோன்மொழி, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் பூா்ணிமா ரவிசந்திரன், திமுக நெமிலி ஒன்றிய செயலாளா் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com