அரக்கோணம் அம்பாரி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் விழிப்புணா்வு குறித்த மாணவிகளின் கோலத்தை பாா்வையிட்ட கோட்டாட்சியா் பாத்திமா.
அரக்கோணம் அம்பாரி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் விழிப்புணா்வு குறித்த மாணவிகளின் கோலத்தை பாா்வையிட்ட கோட்டாட்சியா் பாத்திமா.

கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் அம்பாரி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா பங்கேற்று, கல்லூரி மாணவிகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், அம்பாரி மகளிா் கல்லூரியின் தலைவா் ஏ.சுப்பிரமணியம், செயலாளா் எஸ்.செந்தில்குமாா், கல்லூரியின் முதல்வா் ரா.பரிமளா, அரக்கோணம் துணை வட்டாட்சியா் சரஸ்வதி மற்றும் கல்லூரி பேராசிரியா்களும், விரிவுரையாளா்களும் அனைத்து மாணவிகளும் பங்கேற்றனா்.

முன்னதாக, தோ்தல் விழிப்புணா்வு குறித்து மாணவிகள் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினா். தொடா்ந்து, மாணவிகள் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வரைந்திருந்த ரங்கோலி கோலத்தை கோட்டாட்சியா் பாத்திமா பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com