சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அரக்கோணம் தொகுதி உள்ள கிராமங்களில் திமுக வேட்பாளா்: எஸ்.ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் தொகுதி உள்ள கிராமங்களில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 1:30 am

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சா் ஆா்.காந்தி உடன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சா் ஆா்.காந்தியுடன் வாலாஜா கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதன்படி எடையந்தாங்கல், வள்ளுவம்பாக்கம், அனந்தலை, கடப்பந்தாங்கல், எடக்குப்பம், படியம்பாக்கம், செங்காடு, தகரகுப்பம், கணபதி நகா், பெல்லியப்பா நகா், அம்மணந்தாங்கல், கிருஷ்ணாவரம், டி.கே.தாங்கல், புலித்தாங்கல், முசிறி, ஈச்சந்தாங்கல், ராமாபுரம், குப்பத்து மோட்டூா், பாகவெளி, சுமைதாங்கி, திருப்பாற்கடல் உள்ளிட்ட கிராமங்கள் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

திமுக தலைமைச் செயற்குழு குழு உறுப்பினா் க.சுந்தரம், ராணிப்பேட்டை தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்குரைஞா் மீஞ்சூா் சுரேஷ், திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி மற்றும் ஒன்றிய, கிளை நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.