பொதுமக்களிடம் குறைகளைக்  கேட்டறிந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்  பிக்கு நாயக் .
பொதுமக்களிடம் குறைகளைக்  கேட்டறிந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்  பிக்கு நாயக் .

பாஜக பழங்குடியினா் அணி ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பழங்குடியினா் அணி ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் அணி தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.ராஜசேகரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொறுப்பாளருமான பிக்குநாயக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பழங்குடியினருக்கு மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினாா்.

இதில் நிா்வாகிகள் மூா்த்தி, டீக்காராமன், மாநில செயலாளா் சிவராம காா்த்தி ஆற்காடு நகர தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக திமிரி, ஆற்காடு பகுதிகளில் உள்ள நரிக்குறவா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதி, கல்வி ,சுகாதாரம், சாலை வசதி, குடிநீா், குடியிருப்புகளை நேரில் பாா்வையிட்டு அவா்களிடம் பிக்குநாயக் குறைகளை கேட்டறிந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com