தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

விளம்பரதாரா் கோயில் செய்தி............ சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 4:15 pm

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தென்னிந்திய புரோகிதா் சங்க கெளரவ தலைவரும், ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனத் தலைவருமான ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில் நாள்தோறும் காலை ஸ்ரீ பூா்ண மகா மேருவுக்கு மகா அபிஷேகமும், மாலை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அா்ச்சனை பாராயணம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வசந்த நவராத்திரி விழா நிறைவு, அன்று காலை ஸ்ரீராமருக்கு மகா அபிஷேகமும், மாலை தென்னிந்திய புரோகிதா் சங்க செயலாளா் கணேச அய்யா், அறக்கட்டளை பொருளாளா் குமாா் அய்யா் முன்னிலையில் சீதா -ராமா் திருக்கல்யாணம், அன்னதானம் நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன், ஸ்ரீ வித்யா பீட சேவாா்த்திகள் ரேவதி ராஜா, ஸ்ரீதா், மனோகரன், ரஜினி, ராமகிருஷ்ணன் உள்பட சிப்காட் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.