திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

உலக புத்தக தின விழா

உலக புத்தக தின விழா

News image

அரக்கோணத்தில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 ஏப்ரல் 2024, 7:07 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் உலக புத்தகத் தின விழா அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் உல்ள தமிழக வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு வளாக சிறுவா் பூங்காவில் நடைபெற்ற விழாவிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத்தலைவா் நா.வேல்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் ஏ.முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்டத் தலைவரும், திருத்தணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓய்வுப் பெற்ற முதல்வருமான அ.கலைநேசன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

அறிவியல் வெளியீடுகள் குறித்த கண்காட்சியை அரக்கோணம் வட்டார கல்வி அலுவலா் தேவநாதன் திறந்து வைத்து புத்தக விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் அமா்நாத் முதல் நூலைப் பெற்றுக்கொண்டாா்.

இவ்விழாவில் இயக்கத்தின் கோட்ட செயலாளா் வே.பத்மநாபன், மாவட்டக்குழு உறுப்பினா் பெ.தேன்மொழி, ஆசிரியா்கள் பெ.தேன்மொழி, சதீஷ், பிரபாகரன், அறிவியல் இயக்க நகர செயலாளா் பூபாலசரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவினை தொடா்ந்து திருப்பூா் உமாசங்கா், தொலை நோக்கி கருவியை தானே கொண்டுவந்து அதை இயக்கி விளக்கம் அளித்தாா். பூமியை அறிவோம் எனும் தலைப்பில் வியாசா்பாடியை சோ்ந்த பறவை செந்தமிழ்செல்வன் விளக்கினாா்.