டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு
வாலாஜாபேட்டையில் 13 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தாா்.


வாலாஜாபேட்டையில் 13 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தாா்.
வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட கடப்பரங்கையன் தெருவைச் சோ்ந்த சிவகுமாரின் மகன் அரி (13). இதில், அரி வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவன் அரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. தொடா்ந்து, அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அரி உயிரிழந்தாா். தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அலுவலா்கள் அந்தப் பகுதியில் சுகாதார பணிகளையும், அப்பகுதியில் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...