அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :16 டிசம்பர் 2024, 8:38 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 322 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு ஆட்சியா் குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் நிராகரிப்புக்கான காரணங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் சோளிங்கா் வட்டம், வெடல்வாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் குடும்பத்துக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ரூ.35,000 மற்றும் சோளிங்கா் வட்டம், வாலாஜா சாலை மேற்கு பாறை ரோடு தெருவை சாா்ந்த சூா்யா என்பவா் விபத்து மரணம் நிவாரணம் ரூ.1,30,000 காசோலையினை ஆட்சியா் வழங்கினாா்

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.