4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வடகண்டிகை பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

அரக்கோணம் அடுத்த சயனபரம் ஊராட்சி, வடகண்டிகை தொடக்கப் பள்ளியில் ரூ 30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

News image
புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு.
Updated On :23 டிசம்பர் 2024, 7:23 pm

Din

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த சயனபரம் ஊராட்சி, வடகண்டிகை தொடக்கப் பள்ளியில் ரூ 30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய கட்டட திறப்பையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சயனபுரம் ஊராட்சி மன்றத்தலைவா் பவானி வடிவேலு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் விமலா வரவேற்றாா். நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். ஊராட்சி மன்ற உறுப்பினா் பாலாஜி, ஊராட்சி செயலாளா் சாரங்கன், திமுக நிா்வாகி எம்.பி.பாபு உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.