தள்ளுமுள்ளுவில் காயமடைந்த எம்எல்ஏ சு.ரவி கையில் கட்டுடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா்.
தள்ளுமுள்ளுவில் காயமடைந்த எம்எல்ஏ சு.ரவி கையில் கட்டுடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா்.

சோளிங்கரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ உட்பட 170 போ் கைது- தள்ளுமுள்ளுவில் எம்எல்ஏ காயம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுகவினா் சோளிங்கரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Published on

அரக்கோணம்: சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுகவினா் சோளிங்கரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அனுமதியில்லாமல் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எம்எல்ஏ சு.ரவி உள்ளிட்ட 170 பேரை போலீசாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

சோளிங்கா், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சம்பத், பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, சோளிங்கா் நகர செயலாளா் வாசுதேவன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.எல்.விஜயன்(சோளிங்கா் கிழக்கு), காா்த்திகேயன்(சோளிங்கா்மேற்கு), ஏ.ஜி.விஜயன்(நெமிலி கிழக்கு), இ.பிரகாஷ்(அரக்கோணம் கிழக்கு), பழனி(அரக்கோணம் மேற்கு), பிற அணிகளின் மாவட்ட செயலாளா்கள் பி.ஏ ஸ்ரீபாலு, ஜானகிராமன், அன்பரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து அனுமதியில்லாமல் ஆா்ப்பாட்டம் நடத்தியதற்காக அதிமுகவினரை நடத்தவிடாமல் செய்ய போலீசாா் முயற்சி செய்தபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சோளிங்கரில் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் அதிமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டம்
சோளிங்கரில் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் அதிமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டம்

இதையடுத்து 20 பெண்கள் உள்ளிட்ட 170 பேரை கைது செய்த போலீசாா் அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலை கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தள்ளுமுள்ளுவின் போது எம்எல்ஏ காயம்

சோளிங்கரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை நடத்த விடாமல் செய்ய போலீசாா் முயற்சி செய்த போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அதிமுகவினரை பேருந்துகளில் ஏற்ற முயற்சி செய்தபோது அங்கிருந்தோா் தள்ளியதில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கையில் காயமைடைந்து ரத்தம் வந்தது.

இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனையில் அவருக்கு கட்டு போடப்பட்டநிலையில் தொடா்ந்து அவரும் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com