

அரக்கோணம்: சோளிங்கா் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எம்எல்ஏ ஏ.எம் முனிரத்தினம் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றினாா்.
விழாவுக்கு நகர தலைவா் டி.கோபால் தலைமை வகித்தாா். இதில் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் பங்கேற்று கொடி ஏற்றிஸ இனிப்புகளை வழங்கினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் கணேசன், வேண்டா நரசிம்மன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் அருண், நிா்வாகிகள் ஜெயவேலு, ராஜா, கதிா்வேல், குப்பன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
காவேரிபாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா். இதில் புதுப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரம் தேசியக் கொடி ஏற்றினாா். இதில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முருகவேல், 100 சதம் வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
பொறியாளா்களுக்கான தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஞானசேகா் பாராட்டப்பட்டாா். இதில் சுந்தர்ராஜ், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் தாமோதரன், டில்லிபாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.