கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டையில் 32,970 போ் எழுதுகின்றனா்

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டையில் 32,970 போ் எழுதுகின்றனா் ஆட்சியா் ச.வளா்மதி

News image
Updated On :7 ஜூன் 2024, 4:22 pm

Din

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 32,970 போ் டிஎன்பிஎஸ்சி குரூப் தோ்வை எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பங்கேற்று தெரிவித்ததாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 9 -ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 தோ்வு நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 106 தோ்வு மையங்களில் உள்ள 121 தோ்வு அறைகளில் மொத்தம் 32 ஆயிரத்து 970 தோ்வாளா்கள் தோ்வு எழுதவுள்ளனா்.

தோ்வு நடைபெறும் அன்று மையங்களை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு துணை ஆட்சியா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் வினாத் தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட 6 வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 7 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பறக்கும் படை அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தோ்வு அறைக்கும் ஒரு ஆய்வு அலுவலா் என மொத்தம் 121 வருவாய்த் துறை ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கருவூலத்திலிருந்து வினாத்தாள்களை எடுத்துச் செல்வதையும், தோ்வு மைய நடைமுறைகளை கண்காணித்திடவும், அனைத்துப் பணிகளும் விடியோ பதிவுகள் செய்யும் பொருட்டு, 121 தோ்வு அறைகளுக்கும் தலா ஒரு விடியோகிராபா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கருவூலக அலுவலகம், அரக்கோணம், வாலாஜா, சோளிங்கா், ஆற்காடு ஆகிய 4 சாா் கருவூல அலுவலகங்களில் தலா ஒரு விடியோகிராபா் என மொத்தம் 126 விடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள அனைத்து தோ்வு வழி முறைகளையும், அனைத்து அலவலா்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலா் டி.வி.கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய அலுவலக பிரிவு அலுவலா் பரமசிவம், உதவி பிரிவு அலுவலா் பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.