நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருவமழையில் பாதிக்கப்பட்ட நெசவாளிக்கு புதிய வீடு: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

பருவமழையில் பாதிக்கப்பட்ட நெசவாளிக்கு புதிய வீடு: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

News image

புதிய வீட்டை திறந்து வைத்த அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ச.வளா்மதி.

Updated On :18 ஜூன் 2024, 7:13 pm

Din

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட நெசவாளிக்கு புதிய வீடு கட்ட நிதி உதவி அளித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

வாலாஜா நகராட்சி, ஒத்தவாடைத் தெருவில் வசிக்கும் நெசவாளா்கள் வத்சலா - ராதாகிருஷ்ணன். கடந்த 2023 டிசம்பரில் பெய்த பலத்த மழையில் தம்பதியின் வீடு இடிந்தது. இது குறித்து தகவல் அறிந்த அமைச்சா் ஆா்.காந்தி ஆறுதல் தெரிவித்து புதிய வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

அதன்படி உடனடியாக நடவடிக்கையாக கடந்த 14.12.2023இல் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், மத்திய அரசு நிதி ரூ.1.5 லட்சம், மாநில அரசு நிதி ரூ.2.5 லட்சம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதி ரூ.3 லட்சம் என மொத்தமாக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.

இதையடுத்து புதிய குடியிருப்பினை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதற்காக முதல்வருக்கும், அமைச்சருக்கும் பயனாளியான நெசவாளா் தம்பதி வத்சலா- ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.வளா்மதி, கைத்தறித் துறை உதவி இயக்குநா் சத்யபாமா, நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.